Silver : 199/Gram
ஸ்வர்ணதாரா சிறுசேமிப்புத் திட்டம்
ஸ்வர்ணதாரா சிறுசேமிப்புத் திட்டம் வேறு திட்டத்தைப் போல் அல்லாமல் தனித்துவமிக்கது. திட்டத்தின் முடிவில் தள்ளுபடி கிடைப்பதுடன், மற்றும் பல ஆதாயங்களைத் தருகிறது. மற்ற ஆதாயங்களை கீழே தருகிறோம். மேலும் ஸ்வர்னாதாரா திட்டம் பற்றிய உங்களது அடிப்படையான கேள்விகளுக்கும் பதில் தந்துள்ளோம்.
ஸ்வர்ணதாரா திட்டத்தில் இன்றே சேருங்கள். நல்ல நேரம் ஆரம்பமாகட்டும்.
| மாதத் தவணை | மொத்தம் (11 மாதங்கள்) | தள்ளுபடி | மொத்தசேமிப்பு |
|---|---|---|---|
| 500 | 5,500 | 500 | 5,500 |
| 1,000 | 11,000 | 1,000 | 12,000 |
| 2,000 | 22,000 | 2,000 | 24,000 |
| 5,000 | 55,000 | 5,000 | 60,000 |
| 10,000 | 1,100,00 | 10,000 | 1,200,00 |
| 25,000 | 2,750,00 | 25,000 | 3,000,00 |
சிறுசேமிப்புத் திட்டத்தின் ஒரு மாத தவணைத் தொகை வாங்கும் விலையில் தள்ளுபடி.
தவணை பணம் செலுத்தத் தவறினாலும் திட்டத்தில் நீங்கள் தொடர முடியும். ஆனால், அதற்கேற்றபடி திட்டம்,முடிவறும் காலம் தாமதமாகும்.
மாதத் தவணை ரூ.500 லிருந்து ரூ.25,000 வரை.
மொத்தம் 11 மாதங்கள்.
மாத முதலீடு ரூ.500 முதல் 25000 வரை.
ஏதாவது ஒரு மாதத் தவணை செலுத்தத் தவறினால் அதற்கேற்றவாறு உங்கள் திட்டத்தின் முதிர்வு காலம் நீட்டிக்கப்படும்.
திட்டத்தில் தொடராது நிறுத்திவிட்டால் 11வது தவணை செலுத்துவதற்கு முன் நிறுத்தினால் ஆதாயம் எதுவும் இல்லாமல் செலுத்திய தொகைக்கு நகை வாங்கிக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயம் வாங்க முடியாது.
இந்த திட்டத்தில் வைரம், ப்ளாட்டினம் அல்லது வெள்ளி நகைகள்/ பொருட்கள் வாங்க முடியும்.
சேமிக்கப்பட்ட தொகையைவிடக் கூடுதலாக நான் வாங்கிய நகைகளின் மதிப்பு இருந்தால் என்னவாகும்?
அதிகப்படியான தொகையை மட்டுமே நீங்கள் செலுத்த வேண்டும்.
ரொக்கம் மற்றும் கார்டு மூலம் மாத தவணை செலுத்தும் போது திட்ட உறுப்பினர் அட்டையை கட்டாயம் கொண்டு வந்து பணம் செலுத்த வேண்டும்.
உறுப்பினர் அட்டை இல்லாத ரொக்கம் மற்றும் கார்டு பேமெண்ட் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
மாதாந்திர தவணை 11 மாதங்கள் செலுத்த வேண்டும்.
தவணைத் தொகை மாறாது. ஒவ்வொரு மாதமும் 13ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
அடுத்த மாதத்திற்கு மாற்றவோ அல்லது முன்னரோ செலுத்த முடியாது.
எத்தனை மாதங்கள் தவணை தவறுகிறதோ அத்தனை மாதங்கள் திட்ட முதிர்வு காலமும் தானாகவே தள்ளிச் செல்லும்.
உறுப்பினர் தங்கள் கண க்கில் உள்ள மொத்த சேமிப்பை கடைசி தவணை செலுத்திய பிறகு முதல் தவணை செலுத்திய தேதியிலிருந்து 11 மாத முடிவில் நகையாகப் பெறமுடியும்.
பணமாக எந்த சூழ்நிலையிலும் திரும்பப் பெற முடியாது.
இத்திட்டம் தனியானது. நடைமுறையில் உள்ள அல்லது வேறு எந்த காலத்திலும் நிலவும் சலுகைகளுடனோ இணைக்கப்பட முடியாதது. வேறு எந்தத் திட்டத்திலும் உள்ள தொகை இத்திட்டத்துக்கு மாற்றம் செய்வதும் முடியாதது,
தவணை செலுத்துவது நிறுத்தப்பட்டாலோ அல்லது திட்டம் முடிவடைவதற்கு முன்பே முடிக்க விரும்பினாலோ தள்ளுபடி, வழங்கப்படமாட்டாது,
நீங்கள் தேர்வு செய்யும் தங்க நகைகளின் வகை மற்றும் டிசைன்களைப் பொறுத்து அன்றைய தேதியில் நிர்வாகத்தால் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் சேதாரம் மாறுபடும். வாடிக்கையாளர் பெயர். முகவரி மாற்றம் செய்தால் முன்பே தகவல் தெரிவித்து அதற்கு தேவையான ஆவணங்களுடன் தகவல் கொடுக்க வேண்டும்.
வாடிக்கையாளர் தமக்கு கொடுக்கப்பட்ட பாஸ் புக்கை தொலைத்து விட்டாலோ அல்லது பாஸ் புக் சேதம் அடைந்து விட்டாலோ வாடிக்கையாளர் நோட்டரி பப்ளிக் முன்னிலையில் கையெழுத்திட்ட உறுதிமொழி பத்திரம் மற்றும் அதற்கு தேவையான இதர ஆதாரங்களையும் எடுத்து வரவேண்டும்.
இந்த விதிமுறைகளில் அவ்வப்போது மாற்றம் செய்யவோ, திருத்தவோ, சேர்க்கவோ அல்லது நீக்கவோ நிறுவனத்திற்கு முழு அதிகாரம் உள்ளது.
ஸ்வர்ணதாரா + சிறுசேமிப்புத் திட்டம்
இத்திட்டத்தில் நீங்கள் செலுத்தும் தொகைக்கேற்ப தங்கத்தின் எடை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்
| மாதம் | உதாரண ரொக்கம் மற்றும் தங்கத்தின் விலை நிலவரம் | எடை - கிராம் |
|---|---|---|
| 1 | 5000/2725 | 1.830 |
| 2 | 5000/2850 | 1.750 |
| 3 | 5000/2825 | 1.770 |
| 4 | 5000/2825 | 1.720 |
| 5 | 5000/2855 | 1.750 |
| 6 | 5000/2935 | 1.770 |
| 7 | 5000/3050 | 1.640 |
| 8 | 5000/3080 | 1.620 |
| 9 | 5000/3105 | 1.610 |
| 10 | 5000/3072 | 1.630 |
| 11 | 5000/3095 | 1.620 |
| மொத்த திரட்டப்பட்ட எடை | 18.650 |
இத்திட்டத்தில் ரூ.500/- ரூ.1000/- ரூ.2000/- ரூ.5000/ ரூ.10,000/- ரூ.25,000/- மட்டுமே செலுத்த வேண்டும்.
உங்களுக்கு வசதியான நாட்களில் பணம் கட்டலாம்.
தங்க ஆபரணங்களாக மட்டுமே பெற்றுக் கொள்ள இயலும்.
நீங்கள் செலுத்தும் தொகைக்கேற்ப தங்கத்தின் எடை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
திட்டத்தின் கால அளவு 11 மாதங்கள்
போனஸ் அல்லது வட்டி எதுவும் கூடுதலாக வழங்கப்படமாட்டாது.
உங்கள் மொத்த திரட்டப்பட்ட 18.650 கிராமுக்கு மேல் நகை வாங்கினால் மேற்கொண்டு சேதாரம் மற்றும் தொகையை செலுத்த வேண்டும்.
நீங்கள் பணம் செலுத்தி, பாதியில் நிறுத்திவிட்டால் பணமாக திருப்பித் தரப்படமாட்டாது. அந்த தொகைக்கு உண்டான நகை (சேதாரம் உட்பட) பெற்றுக் கொள்ள முடியும்.
